ஏன் ஐந்து சனிக்கிழமைகள்?

1930 மே 29-க்கும்இ 30-க்கும் இடைப்பட்ட இரவு கண்விழிப்பு ஆராதனையின் போது நமதாண்டவராகிய சேசுநாதர் தாமே லூசியாவுக்கு இதை விளக்கிக் கூறினார்:

‘என் மகளே, இதற்கான காரணம் எளியது் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக ஐந்து தேவதூஷணங்களும், நிந்தைகளும் கட்டிக்கொள்ளப்படுகின்றன.

அவர்களுடைய அமல உற்பவத்திற்கு எதிரான தேவதூஷணம்.

பரலோக மாதாவின் மகா பரிசுத்த கன்னிமைக்கு எதிரான தேவதூஷணம்.

அவர்களுடைய தெய்வீகத் தாய்மைக்கு எதிரான தேவதூஷணம். மேலும் அவர்கள் மனுக்குலத்தின் தாயார் என்னும் அவர்களுடைய மகத்துவத்தை ஏற்க மறுத்தல்.

சிறு குழந்தைகளின் உள்ளங்களில் மாமரி பற்றிய அறியாமையையும், அவர்கள் மீது பகைமையையும் வெறுப்பையும் விளைவிக்க முயல்பவர்களின் செயல்கள்.

திவ்விய கன்னிகையின் பக்திப் பொருட்களை அவமதிப்பவர்களின் செயல்கள்.

இறுதிக் குறிப்பு்

பரிகாரம் இன்றியமையாதது, ஏனெனில் மகா பரிசுத்த கன்னிகைக்கு எதிராகக் கட்டிக் கொள்ளப்படும் நிந்தை அவமானங்கள், மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு எதிரான தேவதூஷணப் பாவங்களாகவே இருக்கின்றன் பரிசுத்த தமத்திரித்துவத்தின் புனித சித்தத்தின்படி, மாமரி சர்வ வல்லபப் பிதாவின் அளவிட முடியாத நேசத்தைப் பெற்றுக் கொண்டவர்களாகவும், திவ்விய இஸ்பிரீத்துசாந்துவானவரின் தேவாலயமாகவும் இருக்கிறார்கள். ஆகவே சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாராக இருக்கும் உன்னதப் பாக்கியத்திற்கு அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பரிகார பக்தி இதை ஏற்றுக் கொள்ளும்படி நம்மை வற்புறுத்துகிறது. இன்றைய நவீன கால மனிதர்கள் ஐந்து முதல் சனிக்கிழமை பக்தியை எப்படி அனுசரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு விசேஷ வரப்பிரசாதங்களை வழங்க சர்வ வல்லப சர்வேசுரன் சித்தமாயிருக்கிறார். பாத்திமா அன்னையின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவது, உலக சமாதானத்தை உறுதிப்படுத்தும், மேலும் மனித இரட்சணியத்தை ஆபத்துக்குள்ளாக்கும் தீமை செயலற்றுப் போகும். மரண வேளையில் மாசற்ற இருதயத்தில் ஆறுதலைக் கண்டடைய நம்மால் இயலும்.

நாம் நம் பரலோக அன்னைக்கு ஆறுதல் அளிக்கவும், அவர்களுடைய வேண்டு கோள்களை நிறைவேற்றுவதன் மூலம் நமது அன்பை அவர்களுக்கு எண்பிக்கவும் ஆசிப்போமாக.